நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு.! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வெளியான முதல் கட்ட தகவல் படி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

1966 ஆம் ஆண்டு பரமக்குடியில் பிறந்த நடிகர் விக்ரம், 1990 ஆம் ஆண்டு 'என் காதல் கண்மணி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நுழைந்தார்.

அதன் பின்னர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 'சேது' திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களின் அன்பைப் பெற்ற விக்ரம், தொடர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 

மேலும் அவரின் திறமையான நடிப்பும், கடின உழைப்பும் ஒவ்வொரு படத்திலும் வெளிக்காட்டி வருகிறார். குறிப்பாக 'ஐ' திரைப்படத்தில் விக்ரமின் உழைப்பு தமிழக மக்களை மெய்சிலிர்க்க வைத்தது. 

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் 'ஆதித்த கரிகாலன்' கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vikram In Hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->