72 குண்டுகள் முழங்க, நடிகர் விவேக்கின் உடல் தகனம்.! மரக்கன்றுகளை ஏந்தி ரசிகர்கள் இறுதி அஞ்சலி.!
Actor Vivek Funeral Function And Police Honor Completed 17 April 2021
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி 4.30 மணி அளவில் உயிரிழந்தார்.
நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நண்பர்கள், திரைத்துறையினர், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விவேக்கின் கலை மற்றும் சேவையை போற்றும் விதமாக காவல் துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
பின்னர் மாலை 4 மணிக்கு மேல் நடிகர் விவேக்கின் உடல் வீட்டில் இருந்து விருகம்பாக்கம் மின் மயானத்திற்கு ஊர்வலம் மூலமாக கொண்டு வரப்பட்ட நிலையில், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வழிநெடுக அஞ்சலி செலுத்திக்கொண்டு வந்தார்கள். கைகளில் மரக்கன்றுகளை ஏந்தியும் தங்களின் மன வருத்தத்தை வெளிப்படுத்திய நிலையில், மாலை 5.40 மணியளவில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Actor Vivek Funeral Function And Police Honor Completed 17 April 2021