இந்த கேள்வியே கேவலமா இருக்கு! ஆதங்கத்தை கொட்டிய நடிகை ஜோதிகா!
Actress Jo say about Directors
நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்' படம் கடந்த மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக நடிகை ஜோதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் பெண்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நேர்காணல் ஒன்றில் நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் அந்த நேர்காணலில், "36 வயதினிலே படம் எனக்கு இரண்டாம் இன்னிங்க்ஸ். இதுவரை நான் நடித்ததிலேயே எனக்கு மிக நெருக்கமான படங்கள் என்றால் 'மொழி' படம் என்றுதான் சொல்வபென். அதன்பிறகு, 'காதல் தி கோரும்தான்'.
இந்த காதல் தி கோர் படத்தில் நான் நடித்த ஓமணா கதாபாத்திரம் சிறப்பானது. என் கதாபாத்திரத்துக்கென நல்ல காட்சிகள் வேண்டும் என்பதே என் எண்ணம்.
ஏதோ ஒரு ஹீரோவுக்கு அருகில் நிற்கும் நாயகியாக இருக்க எனக்கு விருப்பமில்லை. நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் பெண்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பேன்.
''சஞ்சய் லீலா பன்சாலி'' போன்ற ஒரு இயக்குநர் ஆலியா பட்டை மையமாக வைத்து ‘கங்குபாய் காத்திவாடி’ படத்தை இயக்கினார். நாயகிகளை மையமாக வைத்து இதுபோன்ற படங்களை பெரிய இயக்குநர்கள் இயக்க முன்வர வேண்டும்.
எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், அதில் எனக்கான கதாபாத்திரங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனது சினிமா வாழக்கையில் என்னைச் சந்திக்க வரும் இயக்குநர்களிடம் "எனக்கென 2 சீன் இருக்குமா" எனக் கேட்க நிலைமை உள்ளது. இந்தக் கேள்வியே எவ்வளவு கேவலமாக இருக்கு" என்று நடிகை ஜோதிகா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
English Summary
Actress Jo say about Directors