சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, நாளை (திங்கட்கிழமை) முதல்  மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து, பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில்கொண்டு பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும், எனினும்,8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று கூடுதலாக 1450 அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசின் போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கோடை விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள்  திறக்கப்படவுள்ள நிலையில் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக இத்தகைய ஏற்பாட்டை செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Additional buses for Chennai and other cities


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->