கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதல் விமான சேவை.. 14-ந் தேதி முதல் துவக்கம்!
Additional flights from Coimbatore to Chennai and Hyderabad Starting on the 14th
வருகிற 14-ந் தேதி முதல் கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படும் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், புனே, சீரடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், சார்ஜா, சிங்கப்பூர் அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதலாக ஒரு விமானம் வருகிற 14-ந் தேதி முதல் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் கோவை-சென்னை இடையே 9-வது புதிய விமான சேவையும் ,கோவை-ஐதராபாத் இடையே 5-வது புதிய விமான சேவையும் 14-ந் தேதி முதல் தொடங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .கூடுதல் விமான சேவை இயக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை-சென்னை இடையே தினமும் 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதுபோன்று ஐதராபாத்துக்கு 4 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-கோவை-சென்னை, கோவை-ஐதராபாத் இடையே கூடுதலாக நேரடி விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும் . ஜனவரி 14-ந் தேதி முதல் இந்த புதிய சேவை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.மேலும் கூறிய அவர்கள் 180 இருக்கைகள் கொண்ட 5-வது தினசரி ஏ-320 ரக விமான சேவையை ஐதராபாத்-கோவை இடையே இயக்கப்படுகிறது என்றும் .இந்த புதிய விமானம் ஐதராபாத்தில் இருந்து (விமானம் எண்:- 6இ-454) காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 8.35 மணிக்கு கோவை விமானநிலையத்தை வந்தடையும் என்றும் . கோவையில் இருந்து இந்த விமானம் (எண்:-6இ-785) காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 11 மணிக்கு ஐதராபாத் சென்றடையும் என தெரிவித்தனர் .
இதுபோன்று கோவை விமானநிலையத்தில் இருந்து சென்னைக்கு வருகிற 14-ந் தேதி புதிய விமான சேவை இயக்கப்படுகிறது என்றும் . இந்த விமானம் செவ்வாய்க்கிழமைதோறும் மட்டும் இயக்கப்படும் எனவும் . சென்னையில் இருந்து (விமானம் எண்:- 6இ-6141) மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு கோவை வந்தடையும்என்றும் கோவையில் இருந்து (விமானம் எண்:- 6இ-6141) மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு சென்னை சென்றடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
English Summary
Additional flights from Coimbatore to Chennai and Hyderabad Starting on the 14th