ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி! சென்னை காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் நியமனம்!
ADGP Arun appointed as Chennai Police Commissioner
சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூட்டம் சாட்டி வந்தனர்.
தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் கொலைகளும், கொலை முயற்சிகளும், அண்மை காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றையெல்லாம் தமிழக அரசு கட்டுப்படுத்த எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கேட்டு விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு போலீஸ் பயிற்சி பள்ளி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த டிஜிபி ஆக யார் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏடிஜிபி அருணை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சட்ட ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
ADGP Arun appointed as Chennai Police Commissioner