பொறுப்பில் இருந்து என்னை விடுவித்து விடுங்கள்! எடப்பாடி பழனிசாமிக்கு வந்த கடிதம்! - Seithipunal
Seithipunal


சேலம் புறநகர் மாவட்டம், தாரமங்கலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் K. சின்னுசாமி, தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கழகப் பணிகளில் முழுமையாக ஈடுபட இயலாத சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிவித்து, தன்னை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு அதிமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில், இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், தாரமங்கலம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரூர்பட்டி ஊராட்சி, இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக தாரமங்கலம் தெற்கு ஒன்றியத்தில் இணைக்கப்படுகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மேலும், சேலம் புறநகர் மாவட்டம், தாரமங்கலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில்  N. காங்கேயன் (எ) மாசியப்பன் (சேடப்பட்டி கிளைக் கழகச் செயலாளர், ஆரூர்பட்டி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்) நியமித்தும் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy announce for Tharamangalam posting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->