எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! தமிழக அரசுக்கும், ஆர்எஸ்பி.,க்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வழக்கை தொடர்ந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை :

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் சுமார் 4800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும், இது குறித்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தும், மீண்டும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை செய்தார். அப்போது, தமிழக அரசு சார்பில்,லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதல் கட்ட விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றமில்லை என்பதை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை. எனவே மீண்டும் இந்த வழக்கை விசாரணை செய்ய உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, ஆர்எஸ் பாரதியின் மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார்.

மேலும், ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் ஒரே வழக்கை இருமுறை விசாரணை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy Case Judgement 18072023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->