தேர்தல் தோல்வி எதிரொலி: அடுத்து என்ன? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி  பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அதிமுக, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

இந்த தேர்தல் தோல்விக்கு பாஜக உடனான கூட்டணி முறிவே காரணம் என்று அரசியல் விமர்சகர் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைகளால் தான் அதிமுக-பாஜக இடையின கூட்டணி உடைந்ததாகவும், அதிமுகவின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

தற்போது வரை அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையான வார்த்தை போர் நீண்டு கொண்டே இருக்கிறது.

மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்று, இரண்டு கட்சி தலைவர்களும் இப்போதே அறிவித்து விட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து வருகின்ற 10ஆம் தேதி தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வருகின்ற பத்தாம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இந்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெறுவார்கள். 

மேலும் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy meet for Lok Sabha Election result


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->