அவருக்கெல்லாம் அந்த தகுதியே இல்லை - செய்தியாளரின் கேள்விக்கு கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


சட்ட அமைச்சர் ரகுபதி மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. ஊழலை பற்றி பேச சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை என்று, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில், "சட்ட அமைச்சர் ரகுபதி மீதே ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. 

அவர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிறுவையில் உள்ளது. தற்போது ஊழலை கண்காணித்து, தடுக்கும் பொறுப்பு அவரிடம் கொடுப்பட்டிருப்பதே தவறு. எனவே, ஊழலை பற்றி பேச சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு எந்த தகுதியும் இல்லை.

டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகுமாரை பணியில் தொடர அனுமதித்தது ஏன்? என்ற விளக்கத்தை அரசு தர வேண்டும்.

டிஐஜி விஜயகுமார் நேர்மையான, திறமையான அதிகாரி. அவருக்கு 6 மாதம் மன அழுத்தம் இருந்ததாக சொல்கிறார்கள்.

காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க போதிய ஓய்வு கொடுக்க வேண்டும்.

காவல்துறை உயரதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் நடவடிக்கை தேவை" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy Say About Minister Raghupathy and DIG Vijayakumar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->