திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும்! செந்தில்பாலாஜியை கைகாட்டிய எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துற இடம் வாய் திறந்தால், திமுகவின் ஆட்சியை கவிழ்ந்துவிடும் என்று, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் காய்ச்சல் வந்து உள்ளது.

வருமான வரி சோதனை வந்துவிடுமோ, எங்கே அமலாக்க துறை சோதனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜியை கைது செய்தவுடன், திமுகவின் அமைச்சரவையே மருத்துவமனைக்குப் போய் ஆறுதல் சொல்கின்ற காட்சி, அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளியானது.

செந்தில் பாலாஜியை அமலாக்கத் கைது செய்து, உடல்நிலை சரியில்லை என்றவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது, செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் ஏதாவது வாக்குமூலம் கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில், இரவோடு இரவாக ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த அத்தனை பேரும் செந்தில் பாலாஜியை சந்தித்து பேசுகிறார்கள்.

அப்படி என்றால் அவர்களுக்கு எவ்வளவு பயம் இருக்கும். திரு ஸ்டாலின் அவர்களே., செந்தில் பாலாஜி மட்டும் வாய் திறந்தால், உங்கள் ஆட்சிக்கு கவிழ்ந்துவிடும்" என்றார் எடப்பாடி பழனிசாமி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy Say DMK Govt May be Dismissed for Senthilbalaji


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->