விக்கிரவாண்டி தேர்தல் முடிவு: எடப்பாடி பழனிச்சாமி பேட்டி! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திமுக வேட்பாளர் சிவா 124000 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று உள்ளார். மேலும் அவர் 67000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். 

இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் 56,248 வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,520 வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததுடன், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், "இந்த இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். நாங்கள் களத்தில் இல்லை.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தால் திமுக வென்றுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பொன்முடியின் சொந்தத் தொகுதியில் அதிமுக தான் அதிக வாக்குகள் வாங்கியது. 

தமிழக விவசாயிகள், தமிழக மக்களைப் பற்றி திமுகவிற்கு கவலை இல்லை. கூட்டணி தான் முக்கியம் என திமுக உள்ளது. தமிழக விவசாயிகளுக்காக முதலமைச்சர் குரல் கொடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்த திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த இடப்படிபழனிசாமி, சரணடைந்தவரை அதிகாலை அழைத்துச் சென்று என்கவுண்டர் செய்துள்ளனர். இதில் சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என்றும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த என்கவுண்டர் நடந்து இருப்பது, சந்தேகத்தை எழுப்பியுள்ளது" என்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS say about Vikravandi Election Result 2024


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->