அதிமுக பொதுச்செயலாளரரா?  மன்னிப்பு கேட்ட எடப்பாடி பழனிச்சாமி - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுத்தாக்கல் செய்ய முடியும்? என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பு உள்ளது. 

அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது, எப்படி பொதுச்செயலாளர் என குறிப்பிட முடியும்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் என்று மனு தாக்கல் செய்துவிட்டு, தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் என பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இதனை அடுத்து பொதுச் செயலாளர் என குறிப்பிட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உத்தரவிட்டு,  இந்த வழக்கு விசாரணையை வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK General Secretary Case Chennai HC OPS EPS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->