முதலமைச்சர் Not Available! இது வெட்கக்கேடானது... வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!
ADMK Inbadurai Say About ADMK Govt case
கடந்த 2017-ல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்து வந்ததாக உயர் நீதிமன்றத்திற்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உரிமை குழுவின் இந்த நோட்டீசை உயர் நீதிமன்றம் தொடர்ந்து இருமுறை ரத்து செய்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அதிமுக சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று (ஜூலை 22) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கவில்லை என்று கூறினார்.
இதனை அடுத்து நீதிபதிகள், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை தெரிவிக்கையில், "இந்த வழக்கு 3 வருடங்களாக நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் எங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்கிறார். ஆனால் அவர் தான் இந்த நோட்டீசை வழங்கி இருக்க வேண்டும்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் இந்த வழக்கில் மொத்தம் ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரில் ஒருவர் மரணம் அடைந்து விட்டார். மற்ற 17 பேருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்ற தகவலை தெரிவித்தார்.
அப்போது நான் 4, 5 பேருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். இந்த வழக்கு மூன்று வருடங்கள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு மூன்று முறை வாய்தாவுக்கு வந்த போதெல்லாம், இதை குறிப்பிடாமல் இப்போது ஏன் சொல்லுகிறார்கள் என்ற கேள்வி எழுப்பினேன்.
உடனடியாக நீதிபதி இந்த உரிமை மீறல் நோட்டீசை மீண்டும் வழங்க உத்தரவு பிறப்பித்தார். மேலும், உரிமை மீறல் நோட்டீசை அனுப்பிவிட்டு, அதுக்கு உண்டான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு இட்ட நீதிபதிகள், இந்த வழக்கு மீண்டும் வருகின்ற வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இன்று நீதிமன்றத்தில் வழக்கு பட்டியல் சொல்லப்படுவதில் முதலமைச்சர் குறித்து என்ன போட்டிருக்கிறார்கள் தெரியுமா? Not Available என்று போட்டு உள்ளார்கள். இது ஒரு வெட்கக்கேடானது, இது அரசாங்கத்திற்கு வெட்கக்கேடான நிகழ்வாக நான் பார்க்கிறேன்" என்று இன்பதுரை தெரிவித்தார்.
English Summary
ADMK Inbadurai Say About ADMK Govt case