என்னதான் செய்வது, பழனிச்சாமியால் கையை கசக்கும் பன்னீர்செல்வம்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

மேலும் பல்வேறு தொகுதிகளில் இரண்டாம் இடத்திலும், ஒரு சில தொகுதிகளில் டெபாசிட் இழந்து அதிமுக படுதோல்வியை சந்தித்தது.

இதேபோல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வமும் தோல்வியடைந்தார். இந்த தேர்தல் தோல்விகளுக்கு பிறகு அதிமுக மீண்டும் ஒன்றிணைைய வேண்டும் என்ற குரல் பல்வேறு தலைவர்களிடம் எழுந்து உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் 11 பேர் எடப்பாடி பழனிச்சாமி இடம் இது குறித்து வலியுறுத்தியதாகவும் பத்திரிகையாளர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் குறித்து எடப்பாடி பழனிச்சாமியும், எடப்பாடி பழனிசாமி குறித்து ஓ பன்னீர்செல்வமும் செய்தியாளர்கள் சந்திப்பில் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம், ஜெயலலிதா அதிமுகவை மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். அப்பேர்பட்ட அதிமுக தேர்தல்களில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதிமுகவின் இந்த தேர்தல் தோல்விகளுக்கு யார் காரணம் என்று அனைவருக்குமே தெரிந்ததுதான். சரியான தலைமை இல்லாததால் அதிமுக மக்களிடம் அபிப்பிராயத்தை இழந்து விட்டது.

இந்த தேர்தல் படுதோல்வியிலும் பாடம் படிக்க வில்லை என்றால் என்னதான் செய்வது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்னைப் பற்றி கூறிய கருத்துக்கு நான் எதுவும் பதில் சொல்ல தேவையில்லை என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK lok sabha election loss OPS press meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->