பேனர் ஊழியருக்கு 'பளார்' விட்ட அதிமுக பிரமுகர்! வைரலாகும் வீடியோ!
admk man slaps banner shop employee in anger
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் என்ற பகுதியில் வேலாயுதம் என்பவர் டிஜிட்டல் பேனர் அடிக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பேனர் அடிப்பதற்காக வந்த அதிமுக நிர்வாகி கடையின் மேலாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பேனரை அச்சடிப்பதற்காக அதிமுக கட்சியின் கிளைச் செயலாளர் ஆர் கே சாமி என்பவரும் பேரூராட்சி அதிமுக செயலாளர் சிவக்குமார் என்பவரும் பேனர் கடைக்கு சென்று உள்ளனர்.
அப்போது பேனர் கடை மேலாளரிடம் அதிமுக கிளைச்செயலாளர் ஆர். கே சாமி என்பவர் பேனர் அச்சடிப்பதற்கு அதிக காசு வாங்குவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். அப்போது கடையின் மேலாளரான செல்வகுமார் என்பவர் 900 ரூபாய் பேனருக்கு 700 ரூபாய் கொடுத்ததால் தான் அதிக காசு கேட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த இருவருக்குமிடையேயான கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறி உள்ளது அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் கைகலப்பாகி அதிமுக கிளைச் செயலாளர் ஆர் கே சாமி பேனர் கடையின் மேலாளர் செல்வகுமாரை கன்னத்தில் பலமாக அறைந்திருக்கிறார். இது சம்பந்தமான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
admk man slaps banner shop employee in anger