சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு - காரணம் என்ன?
admk out from tn assembly for no chance to speech
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்றார்.
ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அதிருப்தி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து கோஷங்களை எழுப்பி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து, சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருக்கிறது. செய்தியை வெளிப்படுத்தும் அ.தி.மு.க. நிர்வாகிகளை சிறையில் அடைக்கிறீர்கள்.
வீடு புகுந்து ஒரு தாயை தாக்கி கொள்ளையடிப்பவன் அன்றைய தினமே ஜாமினில் வெளிவருவது எப்படி?தமிழகத்தில் மக்கள்ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என்று தெரியவில்லை" என்றுத் தெரிவித்தார்.
English Summary
admk out from tn assembly for no chance to speech