வேற வழியே இல்லை.. கடைசி நேரத்தில் திடீர் திருப்பம்! இதை போய் மறந்துட்டாரே எடப்பாடி பழனிச்சாமி!
ADMK protest Cancel in Vikravandi Kallakurichi kallasarayam case DMK Govt
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தில் தற்போது வரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதற்கும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறியதற்கும் முதலமைச்சர். மு க ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கள்ளக்குறிச்சியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று தற்போது கண்டன உரையாற்றி வருகிறார்.
இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இதனை அடுத்து விழுப்புரத்தில் இன்று நடைபெற இருந்த அதிமுக போராட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
English Summary
ADMK protest Cancel in Vikravandi Kallakurichi kallasarayam case DMK Govt