ஒரே நாளில் அதிரடி நீக்கம்! அந்தர் பல்டி அடித்த செல்லூர் ராஜு!
ADMK Sellur Raju X post deleted
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை ஐந்து கட்ட வாக்கு பதிவு முடிந்த நிலையில், தமிழகத்தில் முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, திமுக தலைமையில் ஒரு கூட்டணி, பாஜக தலைமையிலான ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என நான்கு முனை போட்டியாக இந்த தேர்தல் தமிழகத்தில் அமைந்தது.
காங்கிரஸ் மற்றும் பாஜகவை தவிர்த்து அதிமுக தனித்து மூன்றாவது கூட்டணியாக களம் இறங்கி உள்ளதால், கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.
மேலும் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதிமுகவை மற்ற கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செல்லூர் ராஜு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அவரின் அந்த பதிவில், 'நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி' என்று ராகுல் காந்தி மாணவர்களுடன், இளைஞர்களுடன் எளிய முறையில் உரையாடும் காணொளியை வெளியிட்டிருந்தார்.
செல்லூர் ராஜுவின் இந்த பதிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அதே சமயத்தில் செல்லூர் ராஜு அதிமுகவில் ஒதுக்கப்படுவதாகவும், அவர் விரைவில் காங்கிரஸில் இணைய உள்ளதாகவும், அதன் முன்னோட்டமாகவே தற்போது ராகுல் காந்தியை வாழ்த்தி தனத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.
மேலும் அதிமுக தரப்பில் செல்லூர் ராஜுவின் இந்த பதிவிற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அவருடைய தனிப்பட்ட கருத்து, இருப்பினும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் செல்லூர் ராஜு தனது ட்விட்டர் பதிவை நீக்கி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
English Summary
ADMK Sellur Raju X post deleted