நடிகர் விஜய் - அதிமுக கூட்டணி! அழைப்பு விடுத்த ஜெயக்குமார்! பரபரப்பு டிவிட்டால் அதிரும் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


நடிகர் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இன்று பிறந்தநாள். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக தரப்பில் பல்வேறு தலைவர்களிடமிருந்து நடிகர் விஜய்க்கு வாழ்த்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் நடிகர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தனது X பக்கத்தில், மறைமுகமாக கூட்டணி அழைப்பு விடுக்கும் விதத்தில் நடிகர் விஜய், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சில வார்த்தைகளை பயன்படுத்தி டிவிட் செய்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயக்குமாரின் அந்த X பதிவில்,  "ஆளும் அரசின் விழாக்களுக்கு செல்வது மட்டும் திரைத்துறையின் பணியல்ல!
மக்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் குரலை அரசியல் என்று‌ விடுவார்கள்.
திரைத்துறையினரும்  குரல் கொடுத்தால் அரசால் திசை திருப்ப இயலாது!

கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் அல்ல...
பாமர மக்கள் மீதான அதிகார‌ தாக்குதல்!

எல்லாம் கொடுத்த மக்களுக்காக ஏன்‌ குரல் கொடுக்க கூடாது என்பதே எல்லோரின் கேள்வியாகும்! மக்கள் படும் துயரங்களை கண்டு மற்றவர்களை போன்று தூரம் செல்லாமல் குரல் கொடுத்து நேரிலும் சென்று ஆறுதல் தெரிவித்த தம்பி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! திரைப்பணியோடு நின்று விடாமல் மக்கள் பணியிலும் ஈடுபடவுள்ளது வரவேற்கத்தக்கது" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே நடிகர் விஜய் இந்த கள்ளச்சாராய் விவகாரத்தில் குரல் எழுப்பியதும், களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதும், திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, நடிகர் விஜய் மீது திமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் திமுக ஆதரப்பிலிருந்து இதுவரை ஒரு வாழ்த்துக்கூட வரவில்லை. குறிப்பாக திமுகவின் ஊடகங்கள் கூட விஜய் பிறந்தநாள் குறித்த செய்திகளை தவிர்த்து வருகிறது.

இந்த நிலையில், அதிமுக நடிகர் விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டியதுடன், தற்போது பிறந்தநாளுக்கும் வாழ்த்து மழை பொழிவது, வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் நடிகர் விஜய்க்கு அதிமுக மறைமுக கூட்டணி அழைப்பு விடுப்பதாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நிச்சயமாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றும், முன்பு 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜயகாந்த், திமுகவை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று  எதிர்க்கட்சித் தலைவர் ஆனது போல் நடிகர் விஜய் எதிர்க்கட்சித் தலைவராகலாம், ஏன் அதிமுகவை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால், அல்லது அதிமுக ஆட்சி அமைக்க விஜய் கட்சியின் ஆதரவு தேவையென்றால், கூட்டணி ஆட்சி அமைத்து முதலமைச்சர் ஆகவும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சனங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Side wish to Actor Vijay for 2026 Alliance


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->