#BREAKING : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை.!
Advocate killed in tuticorin
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் வழக்கறிஞரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
மேலும் கொலை செய்தது யார் என்று தெரியவில்லை. இதனையடுத்து வழக்கறிஞர் கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப் பகலில் ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
English Summary
Advocate killed in tuticorin