70 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை!....வீடுகள், தெருக்களில் கடும் வெள்ளம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது தீவிரமடைந்து வருகிறது. தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த வகையில்,  மதுரையில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது.

நேற்று மதியம் 3 மணிக்கு பிறகு மட்டும் 8.செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் மதுரையில் உள்ள சில வீடுகள் மற்றும் தெருக்கள் என மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. சில பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 70 ஆண்டுகளுக்குப்பின் மதுரையில் அதிக மழை பதிவாகியுள்ளது. கடந்த 1955ம் ஆண்டு  அக்டோபர் 17-ம் தேதி மதுரை நகரில் 115 மி.மீ. மழை பதிவாகியது. தற்போது 70 ஆண்டுகளுக்குப்பிறகு நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் மட்டும் 100 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After 70 years madurai was washed away by heavy rains houses and streets were flooded


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->