குட் நியூஸ்! மாணவிகளுக்காக ரூ.50,00,00,000 செலவில் " அகல்விளக்கு திட்டம் " - அன்பில் மகேஷ்! - Seithipunal
Seithipunal


மாணவிகள் எந்த இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய ரூ.50 லட்சம் மதிப்பில் அகல்விளக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  பள்ளி கல்வித்துறையின் 2024-2025 ஆண்டுக்கான மானிய கோரிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமர்ப்பித்தார்.

அதில் முக்கிய திட்டங்களாக அரசு பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். ஆளுமை திறன் மேம்பாட்டு செயல்பாடுகள் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

9 - 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய ரூ. 50 லட்சம் மதிப்பில் அகல் விளக்க திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பு மகேஷ் தெரிவித்தார்.

உடல், மன, சமூக ரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக கையால் உள்ளது குறித்து வழிகாட்டல் வழங்கவும் ஆசிரியர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agal Vilakku Project To be implemented anbil Mahesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->