#மக்களே உஷார்: நாளை தொடங்குகிறது "கத்திரி வெயில்"..!
Agni Natchathiram starts tomorrow
தமிழகத்தில் இந்த வருடம் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கியது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற மே மாதம் 28ந்தேதி வரை நீடிக்கிறது.
அக்னி நட்சத்திரம் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நண்பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, கோடை வெயில் வாட்டி வைத்து வந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
மேலும் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கும் நிலையில் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Agni Natchathiram starts tomorrow