பாஜக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்! வெளியேறுகிறதா அதிமுக? முன்னாள் அமைச்சர் அதிரடி பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுக கூட்டணியில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த வண்ணமாகவே இருந்து வருகிறது. தேசிய அளவியல் பாஜக தலைமையில் அதிமுக இடம் பெற்றிருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இடம் பெற்றுள்ளது.

அதிமுகவின் தலைமை ஒதுக்கக்கூடிய தொகுதி பங்கிட்டின்படியே கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்டுள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற பொது தேர்தலை பொருத்தவரை, அதிமுக கூட்டணியில் பாஜக குறைந்தது பத்து 10 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பத்தை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதிமுக தரப்பில் இரண்டு தொகுதி கொடுப்பதே அதிகம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை, பாஜகவின் டெல்லி தலைமை கண்டு கொள்ளவில்லை. அண்மையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கூட ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை.

இதனால் ஒ பன்னீர்செல்வத்தை பாஜக ஓரங்கட்டி விட்டதாக சர்ச்சை எழுந்தத நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாங்கள் ஓ பன்னீர்செல்வத்தை ஒதுக்கவில்லை என்று தெரிவித்தார்.

இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தால், கூட்டணியில் இருந்து அதிமுக விலகும் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தெரிவிக்கையில், பாஜக கூட்டணிக்கு டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் வந்தால், அதிமுக அந்த கூட்டணியில் நீடிக்குமா என்பது குறித்து, அந்த சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுப்போம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK BJP Alliance issue OPS TTV Edappadi Palanisami


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->