அவர்களுக்கு தங்க தட்டும், ஜப்பான் பயணமும்.. ஏழைகளின் பசிக்கு குப்பை வண்டியா..? அதிமுக கடும் கண்டனம்.!!
AIADMK condemned rice bags came to Amma restaurant in garbage truck
அதிமுக ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்கள் மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டன. அதன்படி திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. துறையூர் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த உணவகத்திற்கு தினமும் 500க்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிட வருகின்றனர்.
இந்த உணவகத்தில் சமைப்பதற்காக துறையூர் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து அரிசி மூட்டைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி நேற்று 48 அரிசி மூட்டைகள் துறையூர் நகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை வாகனத்தில் எடுத்துவரப்பட்டது.
நகராட்சி குப்பைகள் அள்ளும் வாகனத்தில் அரிசி மூட்டைகளை எடுத்து வந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி என்று அடைந்தனர். இதை கண்ட சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நகராட்சி நிர்வாகம் "வழக்கமாக அரிசி மூட்டைகள் ஏற்றி வரும் வாகனம் பழுதடைந்ததால் நகராட்சியில் நிறுத்த வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் அரிசி முட்டைகள் அனுப்பப்பட்டன. அந்த வாகனம் அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குப்பை சேகரிக்க பயன்படுத்துவதில்லை. எனினும் இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளனர்.
துறையூர் நகராட்சியின் இத்தகைய நடவடிக்கைக்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து அதிமுக மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் "அவர்களுக்கு என்னமோ தங்க தட்டும், ஜப்பான் பயணமும், அம்மா உணவகம் - ஏழைகளின் பசிக்கு குப்பை வண்டியா? எளியவர்கள் மீதும், ஏழைகளின மீதும் அக்கறையற்ற இந்த அரசு விரைவில் அகலும்..!" என கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
English Summary
AIADMK condemned rice bags came to Amma restaurant in garbage truck