அதிமுகவை ஒன்றிணைக்க முடியவில்லை! துரோகியை மக்களுக்கு காட்டுவேன் - புகழேந்தி! - Seithipunal
Seithipunal


அதிமுகவை காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பெங்களூர் புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து புகழேந்தி பேசியதாவது,

அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவ மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினையும் நெஞ்சார்ந்த பாராட்டுகிறேன். ரவுடிகள் சுடப்படுகிறார்கள் என்றாலும் அதனையும் வரவேற்கிறேன். தமிழக அரசு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் ரவுடிகளை சுட்டு தள்ள வேண்டும்.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று அனைவரும் வாயால் பேசிக் கொண்டிருப்பதை விட மனதார அனைவரும் ஒன்றிணைய முன் வர வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிமுக கட்சியை காப்பாற்ற முடியும். இது எனது கருத்து மட்டுமல்ல தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரின் விருப்பமும் கருத்தும் ஆகும்.

அதற்காக எங்கள் ஒருங்கிணைப்பு குழு பாடுபட்டு வருகிறது. இது சரிப்பட்டு வரவில்லை என்றால் மக்கள் மத்தியில் அவர்கள் யார் என்பதை தொலுரித்து காட்டுவதற்கு ஒருங்கிணைப்பு குழு தயங்காது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK coordination committee praised that everyone should come forward to save AIADMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->