இடைத்தேர்தலில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள்! ஆதாரத்துடன் அதிமுக தரப்பில் புகார்!
aiadmk cv shanmugam erode by election
ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி குறித்து தேர்தல் ஆணையத்திடம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. புகார் அளித்தார்.
பின்னர் செய்தியர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது, "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற வாக்காளர் பட்டியலில் இருக்கின்ற முறைகேடுகளை, மோசடிகளை புகாராக அளித்துள்ளோம்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 239 வாக்குச்சாவடிகளிலும், 40 ஆயிரம் போலி வாக்காளர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து நாங்கள் சேகரித்த ஆதாரத்தை தற்போது ஒப்படைத்துள்ளோம்.
எங்கள் ஆய்வின்படி, பட்டியலின்படி வாக்காளர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று சரிபார்க்கப்பட்ட போது, அவர் ஏற்கனவே இறந்து இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் இறந்தவர்களின் பெயர் நீக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் வாக்காளர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள ஒரு நபரின் பெயர் மற்றொரு இடத்திலும் இடம் பெற்றுள்ளது. இப்படியான குளறுபடிகள் உள்ளது.
மேலும் ஒரு குடும்பத்தில் ஐந்து வாக்காளர்கள் இருந்தால், ஐந்து வாக்குகளும் ஒரே வாக்குச்சாவடியில் இல்லாமல், இரண்டு மூன்று வாக்குச்சாவடிகளில் இடம் பெற்றுள்ளது.
மோசடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை நாங்கள் ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திற்கு கடந்த பத்தாம் தேதியே கொடுத்து விட்டோம். அதனுடைய சாதாம்சத்தை தேர்தல் ஆணையத்திடம் இன்று கொடுத்துள்ளோம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2212876 பேர். இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, அவர்களின் முகவரியில் இல்லாதவர்களின் பட்டியல் மொத்தம் 30 ஆயிரம் பேர் வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இருக்கிறது. அந்த தொகுதிகளும் அவர்கள் இல்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது.
வாக்காளர் இறந்துவிட்டார், ஆனால் அவர் பெயர் நீக்கப்படாமல் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாயிரத்தி தொள்ளாயிரத்தி நாப்பத்தி ஏழு பேர்.
அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் இடம் பெற்றுள்ள நபர்களின் எண்ணிக்கை 1009 பேர். இப்படி மொத்தமாக 40,000 வாக்குகள் இன்றைக்கு வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். இது மொத்த வாக்காளர்களில் 20 சதவீதம் ஆகும்" என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
English Summary
aiadmk cv shanmugam erode by election