தமிழகத்தை உலுக்கிய வெடி விபத்து.!! என்.ஐ.ஏ விசாரணையை கோரும் அதிமுக.!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு குடோனில் கடந்த 29ம் தேதி காலை 10 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகிலிருந்த 3 வீடுகள் தரைமட்டமாகின.

இந்த விபத்தில் பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரூத்திகா, மகன் ரூத்திஸ், பட்டாசுக் கிடங்கு அருகிலிருந்த உணவகத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் ஆகியோர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார், வடக்கு மண்டல டிஐஜி ராஜேஸ்வரி ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு நிவாரண உதவித்தொகையும் அறிவித்தனர்.

இந்நிலையில் அதிமுக எம்.பி தம்பிதுரை இந்த விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்திற்கு சிலிண்டர் வெடித்தது காரணமல்ல. சிலிண்டர் தானாக வெடிக்காது. குடியிருப்பு பகுதியில் பட்டாசு கடை இருந்ததே விபத்திற்கும், 9 பேர் உயிரிழப்பிற்கும் காரணம். வெடி விபத்து ஏற்பட்ட ஓட்டல் இருந்த பகுதிக்கு சமையல் சிலிண்டர் விநியோகம் செய்யப்படவில்லை என பதிலளித்தார்.

இதனிடையே கிருஷ்ணகிரியில் நிகழ்ந்த வெடி விபத்துக்கு காரணம் சட்ட விரோத கல் குவாரிகளுக்கான வெடி மருந்தை பதுக்கியது தான் என விபத்து நிகழ்ந்த அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்டாசு கடை அருகில் செயல்பட்டு வந்த ஹோட்டலில் இருந்து சிலிண்டர் வெடித்துதான் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினரும் தடய அறிவியல் துறையினரும் கூறியுள்ள தகவலை அந்த ஹோட்டல் உரிமையாளரின் மகன் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் பட்டாசு கடை விபத்து குறித்து சிபிஐ விசாரணை அல்லது என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி தம்பிதுரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகஅரசு இந்த வெடி விபத்து குறித்து அலட்சியப்போக்குடன் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிமுக எம்பி தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK demands CBI probe into Krishnagiri blast


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->