அதிமுகவில் டிடிவி, ஓபிஎஸ், சசிகலா? எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி முடிவு செய்யும் - முன்னாள் அமைச்சர் பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பின்படி,

* ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும்
* அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி 
* பொதுக்குழு தீர்மானங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை 
* பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்த சிவில் மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம்
* தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் சிவில் வழக்கை பாதிக்காது, என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிக்கின்றது.

தீர்ப்புக்கு பின் பேட்டியளித்த *அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, "இந்த தீர்ப்புக்கு பின் நாங்கள் இன்னமும் வேகமாக இயங்குவோம்.

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனுக்கு இனி அதிமுகவில் இடமில்லை. அவர்களை ஏற்பதாக இருந்தால் ஈபிஎஸ் தலைமையில் கட்சி முடிவு செய்யும்" என்றார். 

முன்னதாக, மதுரையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, "ஓபிஎஸ்-க்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது. 

ஒருசிலரை தவிர வேறு யார் அதிமுகவுக்கு வந்தாலும் வரவேற்போம்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS Sc Case OPS TTV Sasikala 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->