நிலவின் தென் துருவத்தில் இந்தியா.!! "பெருமையாக உணர்கிறேன்".!! இஸ்ரோவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திராயன்-3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை 6:04 மணி அளவில் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் இஸ்ரோ நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் சமூகவலை பக்கத்தில் "நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையையும், மகிழ்ச்சியையும் உணர்கிறேன். விக்ரம் லேண்டர் மாட்யூலின் சுமூகமான தரையிறக்கத்தின் மூலம் இந்த பணியை மகத்தான வெற்றியடையச் செய்ததற்காக நமது இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்.

வேறு எந்த உலக விண்வெளி சக்திகளும் செய்ய முடியாததை இஸ்ரோ தலைவர் திரு எஸ்.சோமநாத் மற்றும் நமது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திட்ட இயக்குநர் திரு.பி.வீரமுத்துவேல் அவர்களுக்கும், குறிப்பாக சந்திராயன் இயக்கத்தின் முன்னோடியான முன்னாள் இஸ்ரோ தலைவர் திரு.கே.சிவனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த சாதனையை சாத்தியமாக்கியதற்காகவும், உலகின் எதிர்காலத்திற்கு நமது தேசத்தை பங்களிக்க தூண்டியதற்காகவும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்" என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK general secretary EPS congratulates to ISRO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->