ராணிப்பேட்டை நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகாமையில்  அஇஅதிமுக நகர கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு தண்ணீர், மோர், இளநீர், பழ வகைகள் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆங்காங்கே மக்களுக்கு கட்சி சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு அவர்களுக்கு தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடை வெயில் உக்கிரத்திலிருந்து மக்களை காக்க அதிமுக தொண்டர்கள் மக்களுக்கு நீர் பந்தல் திறந்து அவர்களின் தாகத்தை தீர்க்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.

 அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தமிழக முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறந்து மக்களுக்கு தாகத்தை தீர்த்துவருகின்றனர்.அந்த வகையில் ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகாமையில்  அஇஅதிமுக நகர கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ஜிம். எம். சங்கர் தலைமை தாங்கினார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். எம். சுகுமார் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து சிறப்பித்தார்.இதில் தண்ணீர், மோர், இளநீர், பழ வகைகள் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன்,ஆஇஅதிமுக கழக நிர்வாகிகள்ராதிகா, மற்றும் தண்டபாணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK inaugurates water pandal in Ranipet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->