இராணிப்பேட்டை அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!
AIADMK inaugurates water pandal in Ranipet
இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து பொது மக்களுக்கு தர்பூசணி, இளநீர், நீர்மோர் பழச்சாறு போன்றவைகள் வழங்கப்பட்டன.
கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, அஇஅதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, பொதுமக்களின் தாகத்தை தணித்திட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும்,எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார். அந்த வகையில் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மாவட்ட கழக செயலாளர் இராணிப்பேட்டை S.M.சுகுமார் நீர்மோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி, இளநீர், நீர்மோர் பழச்சாறுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
வாலாஜா நகரம் எம்ஜிஆர் சிலை அருகில்* நிகழ்ச்சி ஏற்பாடு:-W.G.மோகன் Ex.M.C,வாலாஜா நகரக் கழக செயலாளர் உடன் WG.முரளி MC மற்றும் இந்த சிறப்பான விழாவில் மாவட்ட கழக நிர்வாகிகள்நகர/ஒன்றிய/ பேரூராட்சி கழக செயலாளர்கள்-நிர்வாகிகள்மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னாள் நகரக், ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள், சார்பு அணி ஒன்றிய/நகர/பேரூராட்சி செயலாளர்கள், வட்ட/ கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், மகளிர் அணி சகோதரிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டார்கள்.
English Summary
AIADMK inaugurates water pandal in Ranipet