மெரினாவின் அழகே கட்டுமரம் தான்.. இனி "மெரினா கடற்கரை அல்ல பேனா கடற்கரை".. போட்டு தாக்கிய அதிமுக ஜெயக்குமார்..!! - Seithipunal
Seithipunal


சென்னை ஓட்டேரியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் "மீன் இன உற்பத்தி என்பது பொதுவாக முக துவாரங்களில் தான் அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும் பொழுது பாரம்பரியமாக மீன் பிடிப்பவர்கள் முக துவாரத்தை ஒட்டி இருக்கக்கூடிய 15 கிலோ மீட்டர்கள் வரை மீன் பிடிப்பார்கள்.

சுற்றுச்சூழலுக்கு மாறாக சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக மீன் உற்பத்திக்கு வராது. அதனால்தான் பேனா நினைவுச்சின்னம் அமைத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கடுமையான எதிர்ப்புகளை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். உலக புகழ் பெற்ற உலகின் மிக நீண்டமான 2வது பெரிய கடற்கரை என்ற பெருமையை பெற்றுள்ளது.

மெரினா கடற்கரை என்ற பெயர் போய் பேனா கடற்கரை என்ற பெயர்தான் வரும். மெரினா கடற்கரையின் அடையாளமே மறைந்து போய்விடும். மெரினாவின் அழகே கட்டுமரங்களும், வலைகளும், மீன்பிடிப்பதும், மீன் விற்பனை செய்வது தான். இதையெல்லாம் எண்ணாமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பேனா நினைவுச் சின்னத்திற்கு அனுமதி வழங்கியது தவறு. எனவே இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பேனா நினைவுச் சின்னம் வைக்க மெரினாவில் இடம் உண்டு ஆனால் பாரம்பரியமாக மீன் விற்பவர்களுக்கு இடமில்லை. இது போன்ற மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடக் கூடாது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகமும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளோம்"என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Jayakumar demand central govt should reconsider pen monument permission


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->