அதிமுகவினருக்கு நிகழ்ந்த மனித உரிமை மீறல்! புகாரை தட்டிவிட்ட முன்னாள் எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


நேற்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அவை காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் நேற்று ஒரு நாள் சட்டப்பேரவையில் நிகழ்வில் கலந்து கொள்ள இபிஎஸ் அணி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து அதிமுக சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் போராட்டம் இருக்கப் போவதாக அதிமுக தலைமை அறிவித்தது. இதற்கு சட்ட ஒழுங்கை காரணம் காட்டி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

திமுகவினர் தடையை மீறி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, செங்கோட்டையன், அரக்கோணம் ரவி, உதயகுமார், தங்கமணி, கோவிந்தசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ.,க்களை போலீசார் கைது எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாக அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்ப துரை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் "தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிற எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்ட விரோதமாக பேருந்தில் கொண்டு வந்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்ட எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் சந்திக்க விடாமல் காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். 

மேலும் ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லை. ராஜரத்தினம் மைதானத்தில் கழிவறை வசதி இல்லாததால் பெண் நிர்வாகிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஒரே இடத்தில் பலர் அடைக்கப்பட்ட சூழலில் அவசர கால தேவைக்காக ஆம்புலன்ஸ் வசதியும் செய்து தரப்படவில்லை. காவல்துறையின் இத்தகைய செயல் முற்றிலும் மனித உரிமை மீறலை வெளிப்படுத்துகிறது. இது அதிமுக நிர்வாகிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்" என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK lawyer Inbadurai complained to the Human Rights Commission


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->