மீண்டும் ஒன்றினையும் அதிமுக! மீண்டும் வெடிக்கும் பூகம்பம் - இபிஎஸ், ஓபிஎஸ் அடுத்தடுத்து அதிர்ச்சி பேட்டி!
AIADMK OPS Edappadi palanisamy press meet july 2024
அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அக்கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அவரின் மறைவுக்குப் பிறகு பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் டிடிவி தினகரன் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.
தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகித்தனர்.
பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் மற்றும் ஓ பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒன்று கூடிய அதிமுகவினர், ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். இதன்பிறகு அதிமுகவை மீட்க களமிறங்கிய ஓ பன்னீர்செல்வம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், அவ்வப்போது இரு தலைவர்களுக்கும் இடையேயான வார்த்தை போர் முற்றி வரும் நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், "அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் விசுவாசமாக இருந்ததில்லை.
ஓ பன்னீர்செல்வத்திற்கு மூன்று சதவீதம் தான் கட்சியில் ஆதரவு இருந்தது. எங்களுக்கு தான் 97 சதவீத ஆதரவு அதிமுகவில் இருந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுகவை பற்றி கவலைப்படாமல் தன் மகனைப் பற்றி மட்டுமே ஓபிஎஸ் கவலைப்பட்டார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில், அதிமுக விரைவில் ஒன்று சேரும் என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரிந்திருக்கும் அதிமுக கூடிய விரைவில் ஒன்று சேரும் என்றும், அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றும் சிவகங்கையில் ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.
English Summary
AIADMK OPS Edappadi palanisamy press meet july 2024