ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத முதலமைச்சர் சமூக நீதியை எவ்வாறு காப்பார்? அதிமுக கேள்வி.!
AIADMK questioned Chief Minister
ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை மதித்து அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துணிவில்லாத நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள் என்று தமிழக முதல்வருக்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் அரசு அதிகாரியை சாதிப்பெயரை சொல்லி திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்த அரசு அதிகாரியும் ஊடகங்கள் வாயிலாக இதனை வெளிப்படையாக தெரிவித்திருந்தார் இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரனிடமும், பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனிடமும் வழங்கப்பட்டது.
இதனை கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக, அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில்
அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பது தான் நீங்கள் வழங்கும் உட்சபட்ச தண்டனையா?
இது தண்டனையா அல்லது பரிசா?
ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவமதித்த அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூட துணிவில்லாத நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள்? @mkstalin என்று கேள்வி எழுப்பி உள்ளது.
English Summary
AIADMK questioned Chief Minister