தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி திடீர் மாற்றம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனால், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி., செந்தில் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

alcohol enforcement department dgp maheskumar changed in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->