அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்..முதலமைச்சர் ரங்கசாமியிடம் அதிமுக வலியுறுத்தல் ! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் ஃபெங்கல் புயல், பெருமழை, பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். 

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது :புதுச்சேரியில் ஃபெங்கல் புயல், பெருமழை, பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரண உதவியை அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

இதன் தொடர்ச்சியாக தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கருத்தில் கொண்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்துள்ளீர்கள். மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பிற்கு தலைவரான தாங்கள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி எதிர்வரும் 2025 ஜூன் 30 வரை மக்களுக்கு உரிய சலுகைகளை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

குறிப்பாக பயிர் கடன் தள்ளுபடி, தொழில் வரி தள்ளுபடி, சொத்துவரி தள்ளுபடி, குப்பை வரி தள்ளுபடி, வீட்டு வரி தள்ளுபடி, நிலவரி தள்ளுபடி, மின்கட்டண வரி தள்ளுபடி, கலால்வரி தள்ளுபடி, வணிக வரி தள்ளுபடி, கூட்டுறவு சங்க கடன்கள் தள்ளுபடி, மீனவர் கடன் தள்ளுபடி, ஆதிதிராவிடர் கடன் தள்ளுபடி, சிறு குறு தொழில் புரிவோர் கடன் தள்ளுபடி, நடைபாதை வியாபாரிகள் வங்கி கடன் தள்ளுபடி, தனியார் பள்ளி கல்வி கட்டன தள்ளுபடி, சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட அனைத்து தரப்பிற்கும் இயற்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அனைத்து வரிகள், கடன்களை மாநில முதலமைச்சர் அவர்கள் ரத்து செய்து அறிவிக்க வேண்டும்.

ஏற்கனவே புயல் நிவாரண அறிவிப்பில் மழை நீர் முழுமையாக உட்புகுந்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரண இழப்பீட்டு தொகை அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக உப்பளம், காமராஜர் நகர், வில்லியனூர், பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு ஏம்பலம், மணவெளி, மங்கலம், உழவர்கரை, உருளையன்பேட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் உள்ள அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்டன. அவ்வாறு மழை நீர் உட்புகுந்து மிகுந்த சேதாரம் அடைந்துள்ள அனைத்து வீடுகளுக்கும் கூடுதல் நிவாரணத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரண்டாம் கட்ட நிவாரண அறிவிப்பில் அறிவிக்க வேண்டும்.

அதே போன்று சேதமடைந்த படகுக்கு ரூ.10000 இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டது. அதை மாற்றம் செய்து பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு படகுக்கும் படகின் விலை தகுதிக்கு ஏற்றார்போல் இழப்பீட்டு தொகை அனைத்து படகிற்கும் அறிவிக்க வேண்டும்.

விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர், கரும்பு, மணிலா, சவுக்கு, வெற்றிலை, வாழை, பயிர் வகைகள் உள்ளிட்ட பயிரிடப்பட்ட பயிர்களுக்கு தகுந்தார் போல் தனித்தனியாக இழப்பீட்டு தொகையை அறிவிக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில்  புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All types of loans should be waived AIADMK urges CM Rangasamy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->