விஜய்யுடன் கூட்டணி? முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பதில்!
Alliance with Vijay? Chief Minister Rangasamy responds!
நடிகர் விஜய் தனது நண்பர் என்பதால் அடிக்கடி பேசுவேன் என்றும் ஆனால், கூட்டணி குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. தேர்தல் நேரத்தில் சூழ்நிலையை பொறுத்து தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என புதுவை முதல்-மந்திரி ரங்கசாமி கூறியுள்ளார்.
தமிழக பகுதியான வேலூரில் இருந்து வந்த ஏராளமானோர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது, இந்த இணையும் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி என்.ரங்கசாமி கூறியதாவது:
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது, அதை தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது என்றும் பின்னர், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டு ஆட்சி அமைத்தது என்றும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்திலும் போட்டியிடலாம் என முடிவு செய்து, கட்சியின் ஆண்டு விழாவில் அறிவித்தேன் என கூறினார்.
மேலும் பேசிய அவர் ,அதன்படி, வேலூரில் இருந்து ஏராளமானோர் என்.ஆர். காங்கிரசில் இணைந்துள்ளனர் என்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர் என தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி நடிகர் விஜய் தனது நண்பர் என்பதால் அவரிடம் அடிக்கடி பேசுவேன். ஆனால், கூட்டணி குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை என்றும் தேர்தல் நேரத்தில் சூழ்நிலையை பொறுத்து தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.
English Summary
Alliance with Vijay? Chief Minister Rangasamy responds!