நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ''அம்பேத்கர் சுடர் விருது"! - Seithipunal
Seithipunal


நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும். 

அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கக்கூடிய பட்டியலை கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. 

அதில் அம்பேத்கர் சுடர் விருது திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாகவும், பெரியார் ஒளி விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்குவதாகவும், மார்க்ஸ் மாமணி விருது இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனுக்கு வழங்குவதாகவும், அயோத்திதாசர் ஆதவன் விருது பேராசிரியர் ராஜ கௌதமனுக்கு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விருது வழங்கக்கூடிய நிகழ்ச்சி அடுத்த மாதம் மே 25ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பிரனாய் விஜயன், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambedkar Sudar Award to actor Prakash Raj


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->