மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது..! - Seithipunal
Seithipunal


குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் சாதனை செய்யும் நபர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே தளி பஞ்சாயத்தின் உருது பள்ளி தெருவில் வசித்து வருபவர் திருமுகமது ரபிக் என்பவரின் மகன் திரு முகமது ஜூபேர்.

இவர் மத நல்லிணக்கத்திற்காக பல்வேறு பணிகளை ஆட்சி வருகிறார். திருமுகமது ஜூபேர் அவர்கள் "ஆல்ட் நியூஸ்" என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கி சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறார். 

அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளை தடுக்க உதவி செய்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய காணொளி காட்சிகளின் உண்மைத் தன்மையை சரிபார்த்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளிகளில் உள்ள காட்சிகள் தமிழகத்தில் நடைபெற்றது அல்ல என தனது "ஆல்ட் நியூஸ்" இணையதளம் மூலம் தெரிவித்துள்ளார். அதனால், இவருக்கு விருது வழங்கி கௌரவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ameer award for Religious Harmony to muhamad juber


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->