ஆம்னி பேருந்துகளை நடைமேடையில் மட்டுமே நிறுத்த வேண்டும் - அதிரடி காட்டும் அமைச்சர் சிவசங்கர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டனதையடுத்து ஜனவரி 24-ந் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனவும், போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை சென்னைக்குள் செல்ல அனுமதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அரசு சார்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இன்று தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்ட 217 ஆம்னி பேருந்துகளில் 145-க்கும் மேற்பட்ட ஆம்னி  பேருந்துகள் பார்க்கிங் பேவிலும், இதர ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள்ளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைமேடை அருகில் மட்டுமே ஆம்னி பேருந்தை நிறுத்த வேண்டும். நெடுஞ்சாலை பயணிகளை இறக்கிவிட்டு மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது. 

ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் வதந்திகளை பரப்பி குழப்பங்களை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் மார்ச் மாத இறுதிக்குள் ஆம்னி பேருந்துகளை நிறுத்த பார்க்கின் வசதி முழுமையாக ஏற்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amni bus stop kilambakkam platform minister sivasangar info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->