சென்னை மக்களுக்கு மின்வாரியம் தந்த முக்கிய அறிவிப்பு.. இன்று மின்தடை எங்கெல்லாம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழக மின்வாரியம் சார்பில் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று மடிப்பாக்கம், சிறுசேரி, கோவூர், ஆழ்வார்பேட்டை, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

சென்னையில்தடையின்றி மின்சாரம் வழங்க அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வேளையில் மின்சாரம் என்பது தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

இதுதொடர்பாக டேன்ஜெட்கோ எனும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டேன்ஜெட்கோ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் 20.08.2024 (இன்று) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை புழல், திருவெள்ளவாயல், சிறுசேரி, மடிப்பாக்கம், ஆழ்வார்பேட்டை, கோவூர் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

புழல் - திருவெள்ளவயல்: புழல் பகுதியை பொறுத்தமட்டில் பாலாஜி கார்டன, புதுநகர், பை பாஸ் சாலை, அருண் உல்லாச நகரம், சானிதி காலனி, புதுநகர் 5 மற்றும் 6வது தெரு, தர்காஸ் சாலை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. திருவெள்ளவயல் பகுதியை எடுத்து கொண்டால் திருவெள்ளவாயல், ஊரணம்பேடு, காட்டுப்பள்ளி, நெய்தவாயல், வாயலூர், காட்டூர், திருப்பாலைவனம், கடப்பாக்கம், காணியம்பாக்கம், செங்கழுநீர் மேடு, ராமநாதபுரம், மெரட்டூர், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம் பகுதியில் மின்தடை ஏற்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An important announcement by the electricity board to the people of Chennai.. Do you know where the power outages are today?


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->