6 வருடங்களாக வெளிநாட்டில் பணியாற்றிய நபர் மர்ம சாவு! உடலை மீட்டுத் தரக் கோரி உறவினர்கள் மனு! - Seithipunal
Seithipunal


துபாயில் வேலை செய்து வந்த கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது மரணத்தில் இருக்கின்ற மர்மங்களை கண்டறியவும் அவரது உடலை மீட்டுத் தரக் கோரியும் அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சார்ந்தவர் கணேசன். குடும்ப வறுமை காரணமாக 2017 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அமீரக நாடான துபாயில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அவர்களுக்கு தகவல் வந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தங்களது மகனின் சாவில்  மர்மமிருப்பதாகவும் அதனை கண்டறிந்து தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது மகனின் உடலை மீட்டு அவர்களிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த ஆறு வருடங்களாக தன்னுடைய நிறுவனத்தில் எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் நன்றாக பணிபுரிந்து வந்ததாக குறிப்பிட்ட அவரது குடும்பத்தினர் அவரது சாவில் நிச்சயமாக ஏதோ ஒரு மர்மமிருக்கிறது என வருத்தத்துடன் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an youth from cuddalore died in mystery way family wants clarity in death and his remaining mortals


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->