இந்திய விண்வெளி வரலாற்றில் இந்நாள் பொன்னாள் - மகிழ்ச்சி!! இஸ்ரோவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் கடந்த ஜூன் மாதம் விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை 6:04 மணி அளவில் நிலவில் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதற்கு பலதரப்பட்ட மக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3 : இந்திய விண்வெளி வரலாற்றில் இந்நாள் பொன்னாள் - மகிழ்ச்சி!!!

ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஜூலை 14-ஆம் நாள் வெண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பிறகு இன்று மாலை நிலவில் தரையிறக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்துள்ள முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த நாள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் பொன் நாள். இந்த வரலாற்று சாதனையை படைத்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுகள். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani Ramadoss Congratulated to ISRO for Chandrayaan3 mission


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->