ஆண்டிபட்டி தனியார் பள்ளியின் 24 வது ஆண்டு விழா...நடனமாடி அசத்திய மாணவிகள்!
Andipatti Private Schools 24th Anniversary Celebrations The girls danced
ஆண்டிபட்டி பேரூராட்சி, கொண்டம நாயக்கன்பட்டியில் உள்ள பி.ஆர்.கே. நர்சரி அன்று பிரைமரி பள்ளியில் நடந்த 24 வது ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளின் கரகம், கோலாட்டம் ,கிராமிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி பேரூராட்சி, கொண்டம நாயக்கன்பட்டியில் உள்ள பி.ஆர்.கே. நர்சரி அன்று பிரைமரி பள்ளியில் 24 வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் பொன்மலர் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் தொழிலதிபர் பி.ஆர்.பி. அமரேசன், இளங்குயில் கவிஞர் ஞானபாரதி ,சமூக ஆர்வலர் கோவர்த்தனன், ஜெகநாதன், அக்ரி சீனியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ,வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் மாணவ மாணவிகளின் கரகம், கோலாட்டம் ,கிராமிய நிகழ்ச்சிகள் மற்றும் ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். முன்னாள் மாணவர் சூர்யா நன்றி கூறினார். விழாவில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் ஏராளமாக கலந்து கொண்டனர்.
English Summary
Andipatti Private Schools 24th Anniversary Celebrations The girls danced