சபாநாயகரை ஒருமையில் பேசிய திமுக கூட்டணி எம்.எல்.ஏ - முதல்வர் எடுத்த அதிரடி உத்தரவு..!
cm stalin say action against mla velmurugan
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று 4வது நாளாக நடைபெற்றது. அப்போது, சட்டம் ஒழுங்கு குறித்து பிரச்சனைகளை எதிகட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கான பதில்களை அத்துறை அமைச்சர்கள் அளித்து வருகின்றனர்.
மார்ச் 17 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரையும், மார்ச் 24 முதல் ஏப்ரல் 30 வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறும். இந்த நிலையில், சட்டப்பேரவை விதிகளை மீறி பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் தனக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் சபா நாயகர் இருக்கைக்கு வந்து மிரட்டுவதாகவும், வேல் முருகன் ஒருமையில் பேசுவதையும், அமைச்சர்களை கை நீட்டி பேசுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:- "எம்.எல்.ஏ வேல் முருகன் பேச்சு இன்று அதிக பிரசங்கிதனமாக உள்ளது.
விதிகளை மீறி சபாநாயகர் இருக்கை அருகே வரக்கூடாது எனக்கூறியும் வேல்முருகன் கேட்கவில்லை. தனது தவறுகளை திருத்திக் கொள்ளும் வகையில் வேல் முருகன் மீது நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தினார்.
English Summary
cm stalin say action against mla velmurugan