#BREAKING : அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம்.!
Anna University exams dates changed
வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் காரணமாக கடந்த டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பட்டது.
இதனையடுத்து புயல், கன மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளுக்கு மறுதேர்வு தேதி அறிவிக்கப்படடது. அதன்படி, டிச.09ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24ம் தேதியும், டிச.10ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31ம் தேதியும் நடைபெறும் என்று, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஜனவரி 19ம் தேதியும், டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஜனவரி 20ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Anna University exams dates changed