அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு.. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு 27-ம் தேதி விசாரணை!  - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி  பாலியல் துன்புறுத்தல் வழக்கில்  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஜனவரி 27-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தது. மேலும் பாலியல் துன்புறுத்தல்  தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தகவல்களை கசியவிட்ட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதையடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஜனவரி 27-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. இந்தநிலையில் முன்னதாக சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனை ஏழு நாட்கள் விசாரிக்க நீதிமன்ற அனுமதி பெற்று காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காவல் துறையின் விசாரணையில் இருந்த ஞானசேகரன் திடீர் வலிப்பு ஏற்பட்டதாக கூற அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரவுக்கு அழைத்து செல்லப்பட்ட ஞானசேகரனுக்கு தலையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Anna University student case Tamil Nadu governments plea to be heard on May 27 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->